- Warren Bennis
அரசியல் எப்போதுமே மக்களின் பார்வையிலிருந்து சமூக அரசியல் நிதர்சனத்தை நமக்கு கற்றுக்கொடுத்து மேலும் அவர்களுக்கு சேவை செய்ய உந்துசக்தியாக இருக்கிறது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைகொண்டு அரசியல் களத்தில் சமூக இயக்கவியலை கற்றுகொள்ளும் மாணவனாக இந்த சமூகத்திற்கு தன்னாலான சேவையை செய்வதே தன் கடமையென கருதிதனக்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டு மக்களின் வளர்ச்சிக்காக தளராது உழைத்துக்கொண்டிருக்கிறார். சமூகநீதி கருத்துக்களுடன் அனைவருக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சியையே தன் இலட்சியமாக கொண்டு இயங்கி வருகிறார்.
சமூகநீதி சித்தாந்தத்தின் தூண்களான பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் சித்தாந்த பாதையில் சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் மக்களுடன் கரம்கோர்த்து வெறும் கட்டுமானங்களுடன் உருவாவது மட்டுமே வளர்ச்சியல்ல, ஒட்டுமொத்த சமூக வளர்ச்சியே இலட்சியம் என்ற தெளிவான பார்வையை மக்கள் மனதில் தனது இயல்பான அணுகுமுறையால் பதித்துவருகிறார்.
தரமான கல்வியை மக்களிடம் சேர்க்கவேண்டும் என்ற லட்சியத்தின் வெளிப்பாடாக 2009ல் தன்னுடைய அனைவரும் அறிந்த T.J.Sivananda Mudaliar கல்வி அறக்கட்டளையின்கீழ் பொறியியல் கல்லூரி தொடங்கி தன் மாவட்ட மக்களுக்கு உலகத்தர பொறியியல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பினை உறுதிசெய்துவருகிறார். மேலும் அனைத்து தொடக்க, மேல்நிலைப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதையே குறிக்கோளாக கொண்டு முயற்சிகள் எடுத்துவருகிறார்.
இவரது அயராத கல்விசேவைகளை அங்கீகரிக்கும் வகையில் 2008 - 2009ஆம் ஆண்டிற்கான "கல்வி காவலர்" விருது செந்தமிழ்ச்சோலை குழுமத்தின் சார்பில் வழங்கப்பட்டது. தனது கல்லூரியில் ஆண்டுதோறும் 50 மாணவர்களுக்கு கட்டணமில்லா கல்வி மற்றும் அவர்களது வேலைவாய்ப்புக்கு உதவிசெய்துவருகிறார். தொடர்ந்து ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறார். இன்றைய மாணவர்களே நாளைய குடும்பத்தலைவர் என்பதை மனதில் கொண்டு வேலைவாய்ப்பு முகாம்கள் மாவட்டம் முழுவதும் நடத்துவது மட்டுமல்லாமல் தன்னுடைய கல்லூரியிலும் Campus Placement நடத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறார்.
உலகத்தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி மக்கள் முன்னேற்றத்தையே முதல் குறிக்கோளாக கொண்டு அதிநவீன தெருவிளக்குகள், மேல்நிலை குடிநீர் தொட்டிகள், பேருந்து நிலையங்கள், தரமான சாலை வசதிகள் இப்படி எண்ணிலடங்கா வளர்ச்சித்திட்டங்களை மேற்கொண்டுவருகிறார்.
மேலும் பள்ளிகளின் கல்வித்தரம் உயர்த்தப்பட்டு மாணவர்சேர்க்கை அதிகரிப்பது, நூலகங்கள் அமைப்பது, மக்கள் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்பாடு, COVID சிகிச்சை நிலையங்கள், மருத்துவ முகாம்கள் நடத்துவது மற்றும் நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் உணவுப்பொருட்கள் தர பாதுகாப்பிற்கான வசதிகள் என பல்வேறு நலத்திட்டங்களில் தனது தனித்தன்மையை வெளிப்படுத்தி வருகிறார்.
TJS அவர்கள் ஒரு கிராமசபைக்கூட்டதில் உரையாற்றும்போது,எங்கு பாலின சமத்துவம் கடைப்பிடிக்கப்படுகிறதோ, எங்கு ஒருங்கிணைந்த வளர்ச்சி துளிர்விடுகிறதோ அங்குதான் சமூகநீதி எனும் சித்தாந்தம் பிறக்கிறது என்று குறிப்பிட்டார். அவரது கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் நூற்றுக்கணக்கில் மகளிர் சுய உதவிக்குழுக்களும் ஆயிரக்கணக்கில் பெண் தொழில்முனைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து மகளிர் இந்த தொகுதியை இந்தியாவிலேயே சிறந்த தொகுதியாக மாற்ற தன்னாலான பங்களிப்பை அளிக்க மகிழ்ச்சியுடன் களமிறங்குவதை காணலாம்.
சரியான, சமமான வாய்ப்புகள், மக்கள் நலனை கருத்தில் கொண்ட வளர்ச்சித்திட்டங்கள், மகளிர் பாதுகாப்பை உறுதிசெய்யும் சமூக அமைப்பை உருவாக்குதல் இந்த மூன்றையுமே தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டுவருகிறார்.
பேரறிஞர் அண்ணா அவர்களது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு திராவிட சித்தாந்த அரசியல் களமாடி பலமுறை சிறை கண்ட இவர் 1990ல் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கும்மிடிப்பூண்டி ஒன்றிய தலைவராகவும் மக்கள் பணியாற்றியுள்ளார். 2014ஆம் ஆண்டில் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியத்தின் தலைமை செயற்குழு உறுப்பினராக உயர்ந்தார்.
2020ஆம் ஆண்டில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சுற்றி சுழன்று களமாடி தன்னுடைய அரசியல் திறந்தாலும் தொடர் முயற்சியாலும் 2021 சட்டமன்ற தேர்தலில் களம்கண்டு 1,26,452 வாக்குகள் பெற்று பிற வேட்பாளர்களை விட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரது அரசியல் பயணத்தில் முக்கிய திருப்பமாகவே இது அமைத்ததென்று சொல்லலாம்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் முதல் தொகுதியாக விளங்குகிற என் தொகுதியை நாட்டிலேயே முதன்மையான தொகுதி ஆக்குவேன் என்று சபதமேற்று செயல்பட்டு வருகிறேன் என்று கூறிய தன் வாக்கினை மெய்ப்பிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முன்னெடுத்துவருகிறார்.
15 ஜனவரி 1961ல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியை சேர்ந்த பெறுவயல் தாலுகாவை, கவரைப்பேட்டை கிராமத்தில் பிறந்தார். சிறுவயதிலேயே சமூகப்பணிகளில் ஆர்வத்துடன் தன்னைத்தானே வளர்த்துக்கொண்டு பெரும் லட்சியங்களுடன் ஒரு ஆளுமையாக முன்னேறிய இவரின் இணக்கமான அணுகுமுறையையே மக்கள் தங்களின் குடும்பத்தில் ஒருவராக இவரைகொண்டாடும் அளவிற்கு மாற்றியது.
திராவிட அரசியலின் அடிப்படை தூண்களான சுயமரியாதை, சமூக நீதி தத்துவங்களின் விளைவால் பள்ளி நாட்களிலிருந்தே சமூக சேவைகளில் தன் குடும்பத்துடன் ஈடுபட்டு தொகுதியில் தனது பெயரை நிலைநாட்டினார். இவரது இயல்பான அணுகுமுறையாலும் கடும் முயற்சியாலும் ஆளுமைமிக்க தலைவராக இவர் முன்னேறியதற்கு இவரது யுக்திகள் வழிவகுத்தது.
தன் அண்ணனின் நினைவாக கல்வி அறக்கட்டளை அமைத்து சமூக நல முன்னெடுப்புகளை தொடர்ந்து நடத்தி மக்களின் குடும்பத்தில் ஒருவராகவே மாறிவிட்ட திரு. T. J. கோவிந்தராஜன் அவர்கள் TJS என்று எல்லோராலும் அன்பாக வருகிறார். தன்னைத்தானே செதுக்கி களப்பணியில் ஆர்வமுடன் செயல்பட்டு பெரிய குறிக்கோள்களுடன் முன்னேறி வரும் இவரது அணுகுமுறைகள் மக்களால் ஈர்க்கப்பட்டு மக்களும் எந்தவிதமான அரசியல் வேறுபாடுமின்றி குறைகளை முன்வைத்து தீர்வு கண்டுவருகின்றனர்.
தரமான கல்வியை மக்களிடம் சேர்க்கவேண்டும் என்ற லட்சியத்தின் வளிப்பாடாக 2009ல் தன்னுடைய அனைவரும் அறிந்த T.J.Sivananda Mudaliar கல்வி அறக்கட்டளையின்கீழ் பொறியியல் கல்லூரி தொடங்கி தன் மாவட்ட மக்களுக்கு உலகத்தர பொறியியல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பினை உறுதிசெய்துவருகிறார். மேலும் அனைத்து தொடக்க, மேல்நிலைப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதையே குறிக்கோளாக கொண்டு முயற்சிகள் எடுத்துவருகிறார்.
இவரது அயராத கல்விசேவைகளை அங்கீகரிக்கும் வகையில் 2008 - 2009ஆம் ஆண்டிற்கான "கல்வி காவலர்" விருது செந்தமிழ்ச்சோலை குழுமத்தின் சார்பில் வழங்கப்பட்டது. தனது கல்லூரியில் ஆண்டுதோறும் 50 மாணவர்களுக்கு கட்டணமில்லா கல்வி மற்றும் அவர்களது வேலைவாய்ப்புக்கு உதவிசெய்துவருகிறார். தொடர்ந்து ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிவருகிறார். இன்றைய மாணவர்களே நாளைய குடும்பத்தலைவர் என்பதை மனதில் கொண்டு வேலைவாய்ப்பு முகாம்கள் மாவட்டம் முழுவதும் நடத்துவது மட்டுமல்லாமல் தன்னுடைய கல்லூரியிலும் Campus Placement நடத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறார்.