இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை உள்ளிட்ட மிக முக்கிய பொறுப்புகளை கழக பொறுப்புகளுடன் மனத்திலேந்தி களப்பணியாற்ற தொடங்கியிருக்கும் எங்கள் மாண்புமிகு சின்னவர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தேன்.
இன்று கும்மிடிப்பூண்டி தொகுதி எளாவூர் பகுதியில் பெத்தேல் சுவிசேஷ திருச்சபை மற்றும் ரேகோபோத் கிறிஸ்தவர்கள் நலச்சங்கம் இணைந்து நடத்தும் கிறிஸ்துமஸ் மற்றும் நலிந்தோர் நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை பால்வளத் துறை அமைச்சர் மாண்புமிகு. ஆவடி சாமு நாசர் அவர்களும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு. செஞ்சி. K.S.மஸ்தான் அவர்களுடன் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. T. J. கோவிந்தராஜன் MLA ஆகியோர் வழங்கினார். உடன் மாவட்ட கழக நிர்வாகிகள் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுடன் பெத்தேல் சுவிசேஷ திருச்சபை ஊழியர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.
கழகத்தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மிஞ்சூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் எட்டு ஊராட்சி பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர், கும்மிடிப்பூண்டி சட்ட மன்ற உறுப்பினர் டி ஜெ கோவிந்தராஜன் அவர்கள் வழங்கினார். உடன் ஒன்றிய செயலாளர் msk ரமேஷ்ராஜ் அவர்கள், ஒன்றிய தலைவர் G.ரவி , மாவட்ட நிர்வாகிகள் , ஒன்றிய நிர்வாகிகள் ,அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் , கழக நிர்வாகிகள் மற்றும் மூத்த முன்னோடிகள் கலந்துகொண்டனர்.
முன்னாள் மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் பொ.பாண்டுரங்கன் அவர்களின் திருவுருவப்படத்தை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்முடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான திரு. டி.ஜெ. கோவிந்தராஐன் அவர்கள் திறந்து வைத்தார். உடன் பேரூர்,ஒன்றிய,நகர செயலாளர்கள் ,தலைவர் ,துணைத் தலைவர்,கழக நிர்வாகிகள் ,கழக முன்னோடிகள் மற்றும் அவரது குடும்ப நபர்கள் திரளாக பங்கேற்று கழகத்திற்கு அவர் ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூர்ந்து மரியாதையை செலுத்தினர்.
கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் உள்ள 49 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகளுக்குக்கான பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலைத்திருவிழா 2022 நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி KLK அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் TJ.கோவிந்தராஜன்MLA அவர்கள் கலந்துகொண்டபோது உடன் மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய கழக பேரூர் கழக செயலாளர் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அதிகாரிகள் ஆசிரியர் பெருமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் என திரளாக கலந்து கொண்டனர்
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு சின்னவர் உதயநிதி ஸ்டாலின் MLA அவர்களின் 45 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, எல்லாபுரம் தெற்கு ஒன்றியம், கன்னிகைபேர் ஊராட்சியிலும், எல்லாபுரம் வடக்கு ஒன்றியம், பெரியபாளையம் ஊராட்சியிலும், சூளைமேனி ஊராட்சியிலும், ஏழை எளியவருக்கு மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள், பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் 27/11/2022 அன்றைய தினம் பெரியபாளையம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ஆகிய நலத்திட்ட உதவிகளை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் TJ.கோவிந்தராஜன்MLA அவர்கள் வழங்கிய போது உடன் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் தலைமை செயற்குழு உறுப்பினர் J.மூர்த்தி பொதுக்குழு உறுப்பினர் AV.ராமமூர்த்தி எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆ.சத்தியவேலு மாவட்டத் துணைச் செயலாளர்கள் கதிரவன் ML.ரவி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ARD.உதயசூரியன் துணை அமைப்பாளர்கள் KV.லோகேஷ் மோகன்பாபு ஆனந்தகுமார் தில்லைகுமார் A.சீனிவாசன் முனுசாமி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் ஒன்றிய கழக நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்
கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் படி கழக இளைஞரணி செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் MLA அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் (கி) மாவட்ட தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் திரு. TJ. கோவிந்தராஜன் , கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் அவர்களால் வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் கழக நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் விதமாகவும், கழக அரசின் செயல்பாடுகள் மற்றும் கழக நிகழ்வுகளை மக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் நோக்குடனும், புதிய தன்னார்வலர்களை கழகத்தோடு இணைத்து மாவட்ட கழகத்திற்கு வலுசேர்க்கும் விதமாகவும், மக்களின் குறைகளை இணையதளம் வழியாக நேரடியாக பெற்று உடனடி தீர்வு காணும் நோக்கத்தோடு www.tjsgovindarajanmla.in என்ற இணையதளமும், மொபைல் செயலியும் https://tjsgovindarajanmla.in/apps/tjsv1.apk இன்று துவக்கி வைக்கப்பட்டது. கழகத்தோடு இணைந்திடுங்கள். ஒன்றுபடுவோம், வென்றெடுப்போம்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி அரசு பொது மருத்துவமனைக்கு காமராஜர் துறைமுகம் சார்பில் CSR பங்களிப்புடன் ரூ. 47 லட்சம் செலவில் உயர்தர X - Ray கருவிகள் ரத்த பரிசோதனை கருவிகளுடன் சிறப்பு சிகிச்சை பிரிவு திறந்துவைக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் கும்முடிப்பூண்டி தொகுதியில் HMC என்கிற புதிய தனியார் மருத்துவமனையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு. சாமு ஆவடி நாசர் அவர்களுடன் திறந்துவைத்தபோது.