சாதனைகள்

கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு

தேதி : 2023-10-11

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.

Oct 2, கிராம சபை கூட்டம்

தேதி : 2023-10-02

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெருவயல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்.

குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடுநிலைப் பள்ளி

தேதி : 2023-09-26

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பூவலை ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பூவலை கிராமத்தில் நடுநிலைப் பள்ளியை திறந்துவைத்தோம்.

அரசு ஆரம்பம் சுகாதார நிலையத்தில் ஆய்வு

தேதி : 2023-09-26

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி ஆரம்பாக்கம் அரசு ஆரம்பம் சுகாதார நிலையத்தில் ஆய்வு

அரசினர் மேல்நிலை பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி

தேதி : 2023-09-25

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி மாதர்பாக்கம் அரசினர் மேல்நிலை பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கினோம்

சிகிச்சை குறித்து ஆய்வு

தேதி : 2023-09-24

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் ஒவ்வாமை காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கும் 13 சிறுவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆய்வு

ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம்

தேதி : 2023-09-21

கும்மிடிப்பூண்டி தொகுதி ரெட்டம்பேடு ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்துவைத்தோம்.

கலைஞர் மகளிர் உரிமை திட்டம்

தேதி : 2023-09-15

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாட்டின் வரலாற்றில் மாபெரும் திட்டமான கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்கள் காஞ்சியில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி நுழைவாயில் அருகில் நடைபெற்றது

இலவச வீட்டு மனை பட்டா

தேதி : 2023-09-11

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி தோக்கமூர் ஊராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 90 இலவச வீட்டு மனை பட்டாவை வழங்கினோம்.

அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி

தேதி : 2023-09-07

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி ஆரணி பேரூராட்சியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினோம்.

வேளாண் பொறியியல் துறை சார்பாக இயந்திரங்களை வழங்குதல்.

தேதி : 2023-09-04

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை பகுதியில் உள்ள விவசாய மக்களுக்கு வேளாண் பொறியியல் துறை சார்பாக இயந்திரங்களை வழங்கினோம்.

மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி

தேதி : 2023-09-04

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியபாளையம் மற்றும் கன்னிகைபேர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினோம்.

மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

தேதி : 2023-08-31

திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகை தந்து மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டத்திற்கு வருகை தந்து மாண்புமிகு இளைஞர் நலன் செயலாளர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வுமேற்கொண்டார்.

கழக அரசின் முன்னோடி திட்டமான முதலமைச்சரின் காலை உணவு திட்டம்

தேதி : 2023-08-25

கழக அரசின் முன்னோடி திட்டமான முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்கள் திருவாரூர் திருக்குவளையில் தொடங்கி வைத்ததையடுத்து திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் உள்ள துவக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை துவக்கி வைத்தோம்.

மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி

தேதி : 2023-08-24

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் மற்றும் கும்மிடிப்பூண்டி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கினோம்.

வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம் துவக்க விழா

தேதி : 2023-08-23

உணவுத்துறை திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் (சொர்ணவாரி பருவம் 2023-2024) வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஊத்துக்கோட்டையில் துவக்க விழா நடைபெற்றது.

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

தேதி : 2023-08-23

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி மக்களுக்கு மக்கள் தொடர்பு திட்ட முகாம் கீழ்முதலம்பேடு ஊராட்சியில் நல திட்ட உதவிகளை கைத்தறி (ம) துணி நூல் துறை அமைச்சர் மாண்புமிகு ராணிப்பேட்டை R காந்தி அவர்களுடன் வழங்கினோம்.

அடிக்கல் நாட்டுவிழா

தேதி : 2023-08-14

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி சோழவரம் வடக்கு ஒன்றியம் சின்னம்பேடு ஊராட்சியில் சிறுவாபுரி முருகன் கோயில் குளம் சீரமைப்பு பணிகளை இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்கள் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

தேதி : 2023-08-04

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி பூண்டி ஒன்றியத்தில் சீத்தஞ்சேரியில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கியபோது.

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பம் பதிவு செய்யும் முகாமை ஆய்வு செய்த போது.

தேதி : 2023-08-03

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பம் பதிவு செய்யும் முகாம் நடைபெற்று வருவதை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் மாண்புமிகு காந்தி அவர்களுடன்.

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பம் பதிவு செய்யும் முகாமை ஆய்வு செய்த போது.

தேதி : 2023-08-03

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பம் பதிவு செய்யும் முகாம் நடைபெற்று வருவதை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் மாண்புமிகு காந்தி அவர்களுடன்.

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா.

தேதி : 2023-08-02

ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பம் பதிவு செய்யும் முகாம்

தேதி : 2023-07-29

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பம் பதிவு செய்யும் முகாமில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் மாண்புமிகு இராணிப்பேட்டை R காந்தி அவர்களுடன்.

தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் சார்பில் கிராம ஊராட்சிகளுக்கு மின் கலன் வாகனங்களை வழங்கும் நிகழ்ச்சி

தேதி : 2023-07-28

தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் சார்பில் கிராம ஊராட்சிகளுக்கு மின் கலன் வாகனங்களை வழங்கும் நிகழ்ச்சியில்

வேளாண் வளர்ச்சி திட்டம் 2023-2024 விலையில்லா தென்னங்கன்றுகள் மற்றும் மானிய விலையில் வேளாண் இடுப்பொருட்கள் வழங்கும் விழாவில்.

தேதி : 2023-07-27

வேளாண்மை உழவர் நலத்துறை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2023-2024 விலையில்லா தென்னங்கன்றுகள் மற்றும் மானிய விலையில் வேளாண் இடுப்பொருட்களைஇடுப்பொருட்கள் வழங்கும் விழாவில்.

இரத்ததான முகாம்

தேதி : 2023-07-27

இந்தியன் வங்கி கும்மிடிப்பூண்டி இந்தியன் வங்கி கிளையின் சார்பாக TJS பாலிடெக்னிக் கல்லூரியில் இரத்ததான முகாமில்.

வட்டார கல்வி அலுவலகத்தையும் மற்றும் தூய்மை பாரத இயக்கம் திட்டம் சார்பில் 25 கிராம ஊராட்சிகளுக்கு மின் கலன் வாகனத்தை வழங்கும் விழா.

தேதி : 2023-07-13

வட்டார கல்வி அலுவலகத்தையும் மற்றும் தூய்மை பாரத இயக்கம் திட்டம் சார்பில் 25 கிராம ஊராட்சிகளுக்கு மின் கலன் வாகனத்தை வழங்கும் விழாவில்.

நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகள் மரங்கள் நடும் திட்டம் துவக்க விழா.

தேதி : 2023-07-12

புதுவயல் NH5 தேசிய நெடுஞ்சாலையில் ஆசாதி கா அம்ரித் மஹொத்சவ் புதிய இந்தியாவின் தமனிகள் எதிர்காலத்திற்கான நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகள் மரங்கள் நடும் திட்டம் துவக்க விழாவில்.

உயர்வுக்கு படி என்ற நான் முதல்வன் திட்டம் துவக்க விழா.

தேதி : 2023-07-04

நான் முதல்வன் உயர்வுக்கு படி பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி வேலை வாய்ப்பு மற்றும் விழிப்புணர்வையும் வழிகாட்டுதலையும் அளிப்பது குறித்து நான் முதல்வன் திட்ட துவக்க விழாவில்.

உயர்வுக்கு படி என்ற நான் முதல்வன் திட்டம் துவக்க விழா.

தேதி : 2023-07-04

நான் முதல்வன் உயர்வுக்கு படி பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி வேலை வாய்ப்பு மற்றும் விழிப்புணர்வையும் வழிகாட்டுதலையும் அளிப்பது குறித்து நான் முதல்வன் திட்ட துவக்க விழாவில்.

அருள்மிகு ஸ்ரீ கொங்கியம்மன் மற்றும் செல்லியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

தேதி : 2023-06-25

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் தெற்கு ஒன்றியம் காட்டூர் ஊராட்சியில் அருள்மிகு ஸ்ரீ கொங்கியம்மன் மற்றும் செல்லியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

மீஞ்சூர் ஒன்றியம் புதிய சிமெண்ட் சாலையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் மற்றும் அங்கு அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா.

தேதி : 2023-06-25

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி,மீஞ்சூர் தெற்கு ஒன்றியம், காட்டூர் ஊராட்சியில், மீஞ்சூர் ஒன்றியக் குழு நிதியிலிருந்து புதிய சிமெண்ட் சாலையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் மற்றும் அங்கு அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா.

திருவள்ளூர் மாவட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

தேதி : 2023-06-24

திருவள்ளூர் மாவட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில்.

கவரைப்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பாக மகளிர் சுய உதவி குழுகளுக்கு பயனாளிகளுக்கு கடன் ஆகிய நலத்திட்ட உதவிகளை.

தேதி : 2023-06-23

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி காஞ்சிபுரம் திசான் கடன் அட்டை திட்டம் மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்பு சந்தைப்படுத்துதல் விற்பனை நடைமுறை மூலதன செலவினத்திற்கான கடன் மற்றும் கவரைப்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பாக மகளிர் சுய உதவி குழுகளுக்கு பயனாளிகளுக்கு கடன் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 11வது வார்டில் உள்ள நியாய விலைக் கடையில் ஆய்வு

தேதி : 2023-06-14

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 11வது வார்டில் உள்ள நியாய விலைக் கடையில் ஆய்வு மேற்கொண்ட பொழுது.

திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம்

தேதி : 2023-06-07

திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் மாண்புமிகு இராணிப்பேட்டை R.காந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு பணிகள் துறை 1432 ம் பசலி வருவாய் தீர்வாயம்

தேதி : 2023-06-06

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி ஊத்துக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு பணிகள் துறை 1432 ம் பசலி வருவாய் தீர்வாயம் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வனத்துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம்- 2023 கரையோர வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானத்திற்கான சதுப்புநில முன்முயற்சி

தேதி : 2023-06-05

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி காட்டுப்பள்ளி பஞ்சாயத்து, புழுதிவாக்கம் கிராமத்தில், காமராஜர் துறைமுகம் எதிரில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம்- 2023 கரையோர வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானத்திற்கான சதுப்புநில முன்முயற்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் மாண்புமிகு R.காந்தி அவர்களுடன்.

ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் ஒர்த் தொழிற்பயிற்சி மையம் திறப்பு விழா

தேதி : 2023-06-01

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பாஞ்சாலை கிராமத்தில் அமைந்துள்ள ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் ஒர்த் தொழிற்பயிற்சி மையம் திறப்பு விழாவில் மாண்புமிகு அமைச்சர் கீதா ஜீவன் உடன்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு

தேதி : 2023-05-25

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சுண்ணாம்புகுளம் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு

25 கிலோ மெகாவாட் மின் மாற்றி அர்ப்பணிப்பு

தேதி : 2023-05-19

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி ஒன்றியம் தேர்வாய் ஊராட்சியில் 25 கிலோ மெகாவாட் மின் மாற்றியை கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்கள் காணொளி வாயிலாக அர்ப்பணித்தார் - மின் நிலையத்தில் நேரில் இருந்து

குப்பைகளை அல்லும் பேட்டரி வாகனங்கள்

தேதி : 2023-05-15

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளுக்கு குப்பைகளை அல்லும் பேட்டரி வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கி துவக்கி வைத்தோம்

வீட்டு மனை பட்டா வழங்குதல்

தேதி : 2023-05-06

திருவள்ளூர் மாவட்ட வருவாய்த்துறை சார்பில் பழங்குடி இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குதல் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவி தொகைகள் வழங்கினோம்.

புதிய வழித்தடத்தில் பேருந்துகளை துவக்கி வைப்பு

தேதி : 2023-04-02

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தேவதானம்,மெரட்டூர் கல்பாக்கம்,வேளூர் ஆகிய ஊராட்சிகளின் வழியாக புதிய வழித்தடத்தில் பேருந்துகளை துவக்கி வைத்தோம்.

மழைநீர் வடிகால் கால்வாய் பணிகள்

தேதி : 2023-03-25

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் கால்வாய் பணிகளை ஆய்வு செய்தோம்.

புதிய மேம்படுத்தப்பட்ட நவீன பல் சிகிச்சை நாற்காலி உபகரணங்களை திறந்து வைத்தல்

தேதி : 2023-03-25

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய மேம்படுத்தப்பட்ட நவீன பல் சிகிச்சை நாற்காலி உபகரணங்களை திறந்து வைத்தோம்.

அறநிலைத்துறை சார்ந்த ஆய்வு

தேதி : 2023-03-16

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி சோழவரம் வடக்கு ஒன்றியம் ஞாயிறு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயிலில் மற்றும் அக்கிராமத்தில் புதிய திருக்கோயில் அமைப்பது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மாண்புமிகு PK சேகர்பாபு அவர்களுடன் ஆய்வு செய்தோம்.

13 வது தேசிய வாக்காளர் தினம்

தேதி : 2023-01-25

13 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டபந்தியத்தை துவக்கி வைத்து பிறகு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினோம் உடன் கும்மிடிப்பூண்டி வட்டாச்சியர்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பாராட்டு விழா

தேதி : 2023-01-25

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோயிலுக்கு சொந்தமான ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணி நிறைவையொட்டி நில அளவர்களுக்குப் பாராட்டு விழா பெரியபாளையத்தில் நடத்தினோம்

கும்மிடிப்பூண்டி தொகுதியில் 3 புதிய மின்மாற்றிகளை திறந்து வைத்தோம்

தேதி : 2023-03-03

திருவள்ளுர் கிழக்கு மாவட்டம் ,கும்மிடிப்பூண்டி தொகுதி மேல கழினி ஊராட்சி ராக்கம் பாளையம் பகுதியில் 3 புதிய மின்மாற்றிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தோம்

புதிய நீர்த்தேக்க தொட்டி மற்றும் சிமெண்ட் சாலை திறப்பு

தேதி : 2023-03-08

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் மாநெல்லூர் ஊராட்சியில் புதிய நீர்த்தேக்க தொட்டி சிமெண்ட் சாலை ஆகியவற்றை மக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தோம்

பள்ளி வளாகத்திற்கு இருக்கை வழங்கும் விழா

தேதி : 2023-03-11

கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஊராட்சி மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இருக்கை (பெஞ்ச்) வழங்கும் விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றி மகிழ்ந்தேன்.

தெற்கு கும்மிடிப்பூண்டி பேரூர் - பொங்கல் பரிசு வழங்கும் விழா

தேதி : 2023-01-09

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி கிழக்கு மேற்கு தெற்கு கும்மிடிப்பூண்டி பேரூர் ஆகிய கழக நிர்வாகிகளுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு புத்தாடைகள் நாட்காட்டி மற்றும் கழக நிர்வாகிகளுக்கு அறுசுவை உணவு வழங்கி இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு ஆவடி.சாமு. நாசர் அவர்களும் நானும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டோம். உடன் மாநில மாவட்ட கழக நிர்வாகிகள் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் ஒன்றிய கழக நகரக் கழக பேரூர் கழக நிர்வாகிகள் கிளைக்கழக வார்டு கழக நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பொதுமக்கள் எனத் திரளாக கலந்து கொண்டனர்

பொங்கல் பரிசு வழங்கும் விழா

தேதி : 2023-01-10

கழகத்தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கீழ்முதலம்பேடு ஊராட்சி கவரைப்பேட்டை நியாய விலை கடையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 ரொக்க தொகையுடன் பொங்கல் பரிசு தொகுப்பினை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வழங்கினோம். உடன் வட்டாட்சியர் மாவட்ட பொருளாளர் ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய கவுன்சிலர் அரசுத் துறை அதிகாரிகள் பொதுமக்கள் எனத் திரளாக கலந்து கொண்டனர்.

புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி - துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

தேதி : 2023-01-04

கழகத்தலைவர் தமிழ்நாடு முதல்வர் அவர்களின் நல்வாழ்த்துக்கள் உடன் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்ந்தோம்.

கண்ணன்கோட்டை நீர்த்தேக்கத்தில் நடைபெற்று வரும் பணிகள் களஆய்வு

தேதி : 2023-01-04

கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கண்ணன்கோட்டை நீர்த்தேக்கத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தேன். உடன் கழக நிர்வாகிகள், துறை சார்ந்த அதிகாரிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பங்கேற்று கள ஆய்வு செய்தனர்.

சுமூகமாய் தீர்த்து வைக்கப்பட்ட தொழிலாளர் வேலைநிறுத்தம்

தேதி : 2021-05-21

கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஓபுளாபுரம் கிராமத்தில் 35 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் ஷரான் பிளைவுட் தொழிற்சாலையில் பத்து பேரை திடீர் என பணியிடநீக்கம் செய்துள்ளார்கள். அந்த பத்து நபர்களின் பணியிட நீக்கத்தை ரத்து செய்து பணியில் சேர்க்க வேண்டும் என கூறி கடந்த 12.05.2021 அன்று மாலை 4 மணி முதல் ஊழியர்கள் தொழிற்சாலை வளாகத்தில் அமைதியான முறையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தொழிற்சங்க நிர்வாகிகள் சுமூகத்தீர்வு காண கோரிக்கை மனு அளித்தனர், அம்மனுவை பெற்றுக் கொண்டு உடனடி தீர்வு காணப்படும் என உறுதியளித்தேன் . அதன் அடிப்படையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு திரு. சி. வி. கணேசன் அவர்களிடத்தில் தகவல் தெரிவித்த பின்னர் பேச்சு வார்த்தை நடத்தினோம் . அமைச்சர் உடனே தொழிலாளர் ஆணையர் தலைமையில் இரு தரப்பு நிர்வாகிகளையும் அழைத்து சென்னை குறளகத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்ததும் தொழிலாளர்கள் போராட்டத்தைத் கைவிட்டனர். நிர்வாகம் பணியிட நீக்கத்தை கைவிடுவதாக கூறியது. அந்த நிறுவனம் மீண்டும் அவர்களை பணியில் சேர்த்து தொழிற்சாலையும் இயங்க ஆரம்பித்தது . இதனைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட தொழிலாளர் என்னை சந்தித்து நன்றி தெரிவித்தனர். உடன் கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் திரளாக உடனிருந்து சர்ச்சை ஏற்படாமல் தடுத்தனர்.

GR கண்டிகையில் கிறிஸ்துமஸ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தேதி : 2022-12-25

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு GR கண்டிகையில் வல்லமை ஊழியங்கள் சார்பாக கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கினோம். உடன் தேர்வாய் ஊராட்சி மன்ற தலைவர் திரு. முனிவேல் அவர்கள், மதிப்பிற்குரிய தலைமை போதகர் (வல்லமை ஊழிங்கள்) Rev. திரு. தங்கதேவன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

சமூகநீதி ஆட்சியில் மற்றுமொரு மைல்கல்

தேதி : 2022-12-21

திருவள்ளூர் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பழங்குடி இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினோம்.

கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் விழா

தேதி : 2022-12-21

கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின் படி சமூக நலத்துறை சார்பில் கும்மிடிப்பூண்டி தொகுதி பூண்டி ஒன்றியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினேன்.

மக்கள் நலத்திட்டங்கள் துவக்க விழா

தேதி : 2022-12-21

மக்களின் சிரிப்பும் மாநிலத்தின் உழைப்புமே மனிதத்தின் முன்னேற்றமென்ற மாண்புமிகு கழகத்தலைவர் தமிழ்நாடு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின் படி கும்மிடிப்பூண்டி தொகுதி பூண்டி ஒன்றியத்தில் புதிய மின்மாற்றி துவக்கம், புதிய பேருந்து நிழற்குடை திறப்பு, ஊராட்சிமன்ற கட்டிடம் துவக்கம் என பல நிகழ்சியில் கலந்து கொண்டு திறந்து வைத்தோம்.

ரெடிங்டன் நிறுவனம் மற்றும் சென்னை காவேரி மருத்துவமனை இணைந்து உருவாக்கிய தொலை மருத்துவ சிகிச்சை மைய திறப்பு விழா

தேதி : 2022-11-24

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கீழ்முதலம்பேடு ஊராட்சி கவரப்பேட்டையில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக தொலை மருத்துவ சிகிச்சை மையம் ரெடிங்டன் நிறுவனம் மற்றும் சென்னை காவேரி மருத்துவமனை இணைந்து உருவாக்கிய தொலை மருத்துவ சிகிச்சை மையத்தை திறந்து வைத்தேன். உடன் கழக நிர்வாகிகள், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

கிறிஸ்த்மஸ் நலத்திட்ட உதவிகள்

தேதி : 2022-12-08

இன்று பெத்தேல் சுவிசேஷ திருச்சபை மற்றும் ரேகோபோத் கிறிஸ்தவர்கள் நலச்சங்கம் இணைந்து நடத்தும் கிறிஸ்துமஸ் மற்றும் நலிந்தோர் நல திட்ட உதவிகளை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு. ஆவடி சாமு நாசர் அவர்களும், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. செஞ்சி. மஸ்தான் அவர்களும் பங்கேற்று மகிழ்ந்தனர். உடன் மாவட்ட கழக நிர்வாகிகள் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பெத்தேல் சுவிசேஷ திருச்சபை ஊழியர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.

மாண்டஸ் புயல் பாதிப்பு நிவாரண களப்பணிகள்

தேதி : 2022-12-10

தமிழ்நாடு முதல்வர் கழகத்தலைவர் மாண்புமிகு தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதங்களை துரிதமாக சரி செய்ய அதிகாரிகளுக்கு நான் ஆய்வு செய்து உத்தரவிட்ட போது. உடன் கழக நிர்வாகிகள் மக்களின் குறைகளை கேட்டறிந்து ஆவணங்களுடன் களப்பணியில் ஈடுபட்டனர்.

கிறிஸ்துமஸ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தேதி : 2022-12-11

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்முடிப்பூண்டி வட்டார கிறிஸ்துவ கூட்டமைப்பு சங்கத்தின் சார்பாக கும்மிடிப்பூண்டி பஜாரில் பொது மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்முடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. T.J. கோவிந்தராஜன் அவர்கள் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்ந்தார். உடன் கும்முடிப்பூண்டி பேரூர் செயலாளர் திரு. அறிவழகன் , ஒன்றிய செயலாளர்கள் திரு. மு.மணிபாலன் , திரு. ந.பரிமளம் , மாவட்ட பெருளாளர் திரு. எஸ்.ரமேஷ் ,திரு. கேசவன், திரு. அன்புவாணன் ,திரு. கண்ணதாசன் , திரு. கே. ஜி. நமச்சிவாயம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

சுவிசேஷ திருச்சபை மற்றும் ரேகோபோத் கிறிஸ்தவர்கள் நலச்சங்கம் இணைந்து நடத்தும் கிறிஸ்துமஸ் விழா

தேதி : 2022-12-08

இன்று கும்மிடிப்பூண்டி தொகுதி எளாவூர் பகுதியில் பெத்தேல் சுவிசேஷ திருச்சபை மற்றும் ரேகோபோத் கிறிஸ்தவர்கள் நலச்சங்கம் இணைந்து நடத்தும் கிறிஸ்துமஸ் மற்றும் நலிந்தோர் நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை பால்வளத் துறை அமைச்சர் மாண்புமிகு. ஆவடி சாமு நாசர் அவர்களும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு. செஞ்சி. K.S.மஸ்தான் அவர்களுடன் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. T. J. கோவிந்தராஜன் MLA ஆகியோர் வழங்கினார். உடன் மாவட்ட கழக நிர்வாகிகள் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுடன் பெத்தேல் சுவிசேஷ திருச்சபை ஊழியர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.

விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக காப்பாற்றிய மாண்பு

தேதி : 2022-01-19

திருவள்ளூர் மாவட்டம், சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் காவாங்கரை அருகில் இரவு 9 மணி அளவில் நான்கு சக்கர வாகனம் சாலை விபத்தில் சிக்கி பெரும் பயணித்தவர்கள் பலத்த காயம் அடைந்தவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் வரவைக்கப்பட்டு போக்குவரத்து காவலருடன் இணைந்து களப்பணியாற்றி அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று நலமாகும்வரை தொடர்ந்து கண்காணித்தார்.

பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது

தேதி : 2022-01-08

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி, கீழ்முதலம்பேடு ஊராட்சி கவரைப்பேட்டை நியாய விலைக்கடையில் பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்

புதிய மின்மாற்றிகள் துவக்கி வைப்பு

தேதி : 2022-01-04

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி எல்லாபுரம் தெற்கு ஒன்றியம், மதுரவாசல், ஆலப்பாக்கம், அத்தங்கிகாவணூர் ஆகிய நான்கு ஊராட்சிகளில் மக்கள் பயன்பாட்டிற்காக புதிய மின்மாற்றிகளை துவக்கி வைத்தபோது.

கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்

தேதி : 2022-01-04

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி பூண்டி கிழக்கு ஒன்றியம் போந்தவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 15 முதல் 18 வயதுவரையிலான மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் துவங்கி வைத்தார்.

கொரோனா தடுப்பூசி முகாம்

தேதி : 2022-01-03

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி கவரைப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 15 முதல் 18 வயது வரையிலான மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துவங்கி வைத்தார்.

ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் மின்சக்தி 2047 பெருவிழா

தேதி : 2022-07-29

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூரில் ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் மின்சக்தி 2047 பெருவிழா நடைபெற்றபோது

பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

தேதி : 2022-07-29

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம், மாதர்பாக்கம் ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றியபோது.

நீண்டகால கோரிக்கை நிறைவேற்றம் - புதிய பேருந்துகள் துவக்கம்

தேதி : 2022-07-29

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கடந்த அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட பேருந்து வழித்தடங்கள் T32/T33/T176 கும்மிடிப்பூண்டி முதல் மேட்டுப்பாளையம், கும்மிடிப்பூண்டி முதல் மேலக்கழனி, கும்மிடிப்பூண்டி முதல் தேர்வாய் சிப்காட், கும்மிடிப்பூண்டி முதல் அண்ணாமலைசேரி, கும்மிடிப்பூண்டி முதல் காஞ்சிபுரம் வரையிலான பேருந்து வழித்தடங்களில் பேருந்துகளை துவக்கிவைத்து மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டது குறித்து கலந்துரையாடி மகிழ்ந்தபோது.

மகளிர் சுய உதவிக்குழு கடன் வழங்கும் நிகழ்ச்சி

தேதி : 2022-07-22

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி, பூண்டி ஒன்றியத்தில் உள்ள உள்ள மெய்யூர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மகளிர் சுய உதவிக்குழு கடன் பயிர் கடன் உள்ளிட்ட பல்வகை கடன்களை வழங்கி உரையாற்றியபோது;

குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டி

தேதி : 2022-07-20

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கும்மிடிப்பூண்டி KLK ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முப்பெரும் விழாவில் குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டியை தொடங்கி வைத்து விளையாட்டு ஆர்வம் குறித்து கேட்டறிந்து ATAL LAB, CCTV கேமரா வசதிகளை துவக்கி வைத்து கலந்துரையாடியபோது.

புதிய ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகம் துவக்கம்

தேதி : 2022-07-16

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, எல்லாபுரம் வடக்கு ஒன்றியம், பெரியபாளையம் ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் புதிய ஆய்வக கட்டிடத்தை அடிக்கல் நாட்டி ஆய்வு செய்தபோது.

புதிய தனியார் மருத்துவமனை துவக்கம்

தேதி : 2022-07-13

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட HMC என்கிற புதிய தனியார் மருத்துவமனையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு. மா. சுப்பிரமணியம் அவர்கள், மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு. ஆவடி சாமு நாசர் அவர்களுடன் திறந்து வைத்தபோது.

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு

தேதி : 2022-07-09

திருவள்ளூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநகராட்சி , நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு கே.என். நேரு, பால்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு ஆவடி சா.மு. நாசர் அவர்களுடன் கலந்துகொண்டபோது

ஜீவன்பீமா நகர் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை ஆய்வு செய்தபோது.

தேதி : 2022-07-08

அண்ணாநகர் மேற்கில் உள்ள ஜீவன்பீமா நகர் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை வீட்டு வசதித்துறை அமைச்சர் மாண்புமிகு ஈரோடு பி. முத்துசாமி, இந்து சமய அறநிலையத்துறை அமைசர் மாண்புமிகு பி.கே. சேகர்பாபு, வீட்டுவசதி வாரியத் தலைவர் திரு. பூச்சி முருகன் அவர்களுடன் ஆய்வு செய்தபோது.

வேளாண்மை துறை புதிய கட்டிடத்தை அடிக்கல்

தேதி : 2022-07-06

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை துறை புதிய கட்டிடத்தை அடிக்கல் நாட்டியபோது.

12 ஊராட்சிகளுக் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் ஆழ்துளை கிணறு உபகரணங்களை வழங்கியபோது.

தேதி : 2022-07-06

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 12 ஊராட்சிகளுக் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆழ்துளை கிணறு உபகரணங்களை வழங்கியபோது.

130 KG 512 Gram எடையில் பொன் இனங்கள் ஒப்படைப்பு

தேதி : 2022-06-30

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, எல்லாபுரம் வடக்கு ஒன்றியம் பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலில் காணிக்கையாக வரப்பெற்ற திருக்கோயிலுக்கு தேவைப்படும் இனங்கள் நீங்கலாக 130 கிலோ 512 கிராம் எடையுள்ள பிரித்தெடுக்கப்பட்ட பலமாற்று பொன் இனங்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு பி. கே. சேகர்பாபு அவர்கள், நீதியரசர் திரு. துரைசாமி ராஜு அவர்கள் முன்னிலையில் ஸ்டேட் வாங்கி மேலாளரிடம் ஒப்படைத்தபோது.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டம் துவக்கம்

தேதி : 2022-06-27

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி எல்லாபுரம் வடக்கு ஒன்றியம் பேரண்டூர் ஊராட்சியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தபோது

18 ஊராட்சிகளில் 53 பயனாளிகளுக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான ஆடுகள்

தேதி : 2022-06-25

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 61 ஊராட்சிகளில் முதல்கட்டமாக 18 ஊராட்சிகளில் 53 பயனாளிகளுக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான ஆடுகளை பயனாளிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றியபோது.

T41 பேருந்தை துவக்கிவைத்து கொடியசைத்தபோது

தேதி : 2022-06-22

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், பொன்னேரி தொகுதி சோழவரம் வடக்கு ஒன்றியம் பொது மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மாதவரம் முதல் செங்குன்றம் வரையிலான T41 பேருந்தை துவக்கிவைத்து கொடியசைத்தபோது.

நலத்திட்ட உதவிக்கான ஆணைகளை வழங்கியபோது.

தேதி : 2022-06-16

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கும்மிடிப்பூண்டி வட்டத்திலும் மற்றும் ஊத்துக்கோட்டை வட்டத்திலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 1431 பசலிக்கான வருவாய், தீர்வாயம் 1431 இராயத்துக்கள் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிக்கான ஆணைகளை வழங்கியபோது.

வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் விதை சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

தேதி : 2022-06-14

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கீழ்முதலம்பேடு ஊராட்சியில் கவரைப்பேட்டையிலும் இராக்காம்பாளையம் ஊராட்சியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகவரித்துறை கொசஸ்தலை கூட்டுப்பண்ணையை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் விதை சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைத்து உரையாற்றியபோது.

பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து கள ஆய்வு

தேதி : 2022-06-14

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட எளாவூர் ஊராட்சி தலையாரிப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் உண்ணும் உணவை அவர்களோடு உண்டு தரப்பரிசோதனை செய்தபின் பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தபோது

இலவச கழிப்பறைகள் திறப்பு

தேதி : 2022-06-11

Rotary Club உடன் இணைந்து இலவச கழிப்பறை திட்டம் கீழ் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பனப்பாக்கம் ஊராட்சியில் இலவச கழிப்பறைகள் திறந்துவைத்தபோது.

எம்.ஜி.ஆர். நகரில் புதியதாக கட்டிட கால்வாய் மற்றும் சிமெண்ட் சாலை

தேதி : 2022-06-10

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி எல்லாபுரம் வடக்கு ஒன்றியம், பெரியபாளையம் ஊராட்சி எம்.ஜி.ஆர். நகரில் புதியதாக கட்டிட கால்வாய் மற்றும் சிமெண்ட் சாலையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தபோது

கலைஞர் அவர்களின் 99வது பிறந்தநாள் விழா - பொன்னேரி தொகுதி மீஞ்சூர் வடக்கு ஒன்றியம்

தேதி : 2022-06-03

முத்தமிழறிஞர் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் 99வது பிறந்தநாள் விழா திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் வடக்கு ஒன்றியம் பொன்னேரி நகராட்சியில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி பின்னர் மாவட்டம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டபோது.

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

தேதி : 2022-06-01

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, ஆதிதிராவிடர் பழங்குடி இன மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது

மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தேதி : 2022-03-27

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் TJS பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை துவக்கி வைத்தபோது.

ஊரக வளர்ச்சி வங்கியில் நகைகள் மற்றும் தள்ளுபடி சான்று

தேதி : 2022-03-23

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி, பெரியபாளையம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் நகைகள் மற்றும் தள்ளுபடி சான்று உரிய பயனாளிகளிடம் வழங்கப்பட்டது

602 நபர்களுக்கு 2 கோடி 34 லட்சம் மதிப்பில் நகைக்கடன் தள்ளுபடி சான்று

தேதி : 2022-03-23

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் 602 நபர்களுக்கு 2 கோடி 34 லட்சம் மதிப்பில் நகைகள் மற்றும் தள்ளுபடி சான்று உரிய பயனாளிகளிடம்

கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் நகைகள் மற்றும் தள்ளுபடி சான்று

தேதி : 2022-03-21

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, பொன்னேரி கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் நகைகள் மற்றும் தள்ளுபடி சான்று உரிய பயனாளிகளிடம் வழங்கினார்.

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தேதி : 2022-03-21

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி பெறுவயல் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தபோது.

104 பயனாளிகளிடம் தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் நகைகள் மற்றும் தள்ளுபடி சான்று

தேதி : 2022-03-21

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கவரைப்பேட்டை கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் நகைகள் மற்றும் தள்ளுபடி சான்று உரிய 104 பயனாளிகளிடம் வழங்கினார்.

கல்வி மேலாண்மை குழு விழா

தேதி : 2022-03-20

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியில் கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் நடைபெற்ற கல்வி மேலாண்மை குழு விழாவில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

12-14 வயதுடையவர்களுக்கு COVID - 19 தடுப்பூசி செலுத்தும் திட்டம்

தேதி : 2022-03-17

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கீழமுதல்மேடு ஊராட்சியில் கவரைப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு 12-14 வயதுடையவர்களுக்கு COVID - 19 தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

முதல் பேரூராட்சி மன்ற கூட்டம்

தேதி : 2022-03-16

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மன்ற முதல் கூட்டம் நடைபெற்றபோது

விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கும் விழா

தேதி : 2022-03-15

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில், கீழ்முதலம்பேடு ஊராட்சியில் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கினார்.

கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பு ஊசி முகாம்

தேதி : 2022-03-15

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கீழ்முதலம்பேடு ஊராட்சியில் கால்நடை துறை சார்பில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பு ஊசி முகாமை துவக்கி வைத்தார்.

சிறப்பு டயாலிசிஸ் பிரிவு துவக்கம்

தேதி : 2022-03-15

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் நான்கு சீறுநீரக டயாலிசிஸ் பிரிவை திறந்து வைத்தார்.

திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்வு

தேதி : 2022-03-15

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி எல்லாபுரம், பூண்டி ஆகிய ஒன்றியத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துரை சார்பில் திருமண உதவித்தொகை (ம) தாலிக்கு 8 கிராம் தங்கம் பயனாளிகளுக்கு வழங்கினார்.

பொன்னேரி தொகுதி நகராட்சி தலைவரின் முதல் கூட்டம்

தேதி : 2022-03-14

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், பொன்னேரி தொகுதி நகராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர். பரிமளம் விஸ்வநாதன் அவர்களின் முதல் கூட்டத்தில் பங்கேற்றபோது.

அன்னை ஆலயம் மாதா கோயில் திருவிழா

தேதி : 2022-03-12

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம், ஆரம்பாக்கம் ஊராட்சியில் 125 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த வானதூதர்களின் அன்னை ஆலயம் மாதா கோயில் திருவிழாவில் கலந்து கொண்டபோது.

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

தேதி : 2022-03-07

உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்டம் தொடக்க விழா கீழ்முதலம்பேடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றபோது .

18 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைப்பு

தேதி : 2022-05-30

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம், ஈகுவாரபாளையம் மற்றும் மாநெல்லூர் ஊராட்சியை சேர்ந்த 106 பழங்குடி இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் மற்றும் சார்ந்த 20 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை 18 குடும்பங்களுக்கு குடும்ப அட்டைகள் 5 நபர்களுக்கு சலவைப்பெட்டிகள் மட்டும் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கால்நடை கிளை மருந்தக கட்டிடம், ரூபாய் 18 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையை பால்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு ஆவடி சாமு நாசர் திறந்து வைத்தபோது.

அனைவர்க்கும் வீடு திட்டம்

தேதி : 2022-05-27

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் உள்ள மக்களுக்கு அனைவரும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பணி ஆணைகளை வழங்கியபோது

பல்வேறு நலத்திட்ட உதவிகள் ஒரே நாளில் துவக்கம்

தேதி : 2022-05-25

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட ஓபசமுத்திரம் ஊராட்சியில் உள்ள பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய நீர்த்தேக்கத் தொட்டி, புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் புதிய மின்மாற்றி ஆகியவை திறந்து வைத்தபோது.

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

தேதி : 2022-05-24

திருவள்ளூர் மாவட்டம், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றபோது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட துவக்க விழா

தேதி : 2022-05-23

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம், மேலைக்கழனி ஊராட்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தினை கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்கள் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தபோது.

அரசுப்பள்ளி கட்டிட அடிக்கல் நாட்டு விழா

தேதி : 2022-05-19

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம், மாதர்பாக்கத்தில் அரசுப்பள்ளியில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய கட்டிடப்பணி அடிக்கல் நாட்டியபோது.

அரசு பள்ளி ஆய்வு

தேதி : 2022-05-19

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் தண்டலச்சேரியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டபோது.

சிந்தலக்குப்பம் பகுதியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

தேதி : 2022-05-17

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட சிந்தலக்குப்பம் பகுதியில், Birla Carbon India Limited மற்றும் CSR Projects Handing Over Ceremony சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்துவைத்தபோது.

அரசு மேல்நிலை பள்ளியில் புதிய கழிவறைகள் திறப்பு

தேதி : 2022-05-17

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட புதுகும்மிடிபூண்டியில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளின் பயன்பாட்டுக்காக புதிய கழிவறையை Birla Carbon India Limited மற்றும் CSR Projects Handing Over Ceremony சார்பில் திறந்துவைத்தபோது.

புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

தேதி : 2022-05-16

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட குருவாட்டுச்சேரி, சிறுபுழல்பேட்டை ஆகிய பகுதிகளில் Birla Carbon India Limited மற்றும் CSR Projects Handing Over Ceremony சார்பில் பொதுமக்களை பயன்பாட்டிற்காக புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்துவைத்தபோது.

கோவில் பராமரிப்பு குறித்த ஆய்வு

தேதி : 2022-05-14

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மேலூர் கிராமத்தில் அருள்மிகு திருவுடையம்மன் பழவேற்காடு அருள்மிகு ஆதிநாராயண பெருமாள் திருக்கோயில் மற்றும் திருப்பாலைவனம் அருள்மிகு திருப்பளிஸ்வரரை திருக்கோயில் ஆகிய இடங்களில் அன்னதானக்கூடம், ராஜகோபுரம் மற்றும் திருக்குளங்கள் ஆகியவற்றை பராமரிப்பு பணிகள் செய்துவருவது குறித்து மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு அவர்களுடன் ஆய்வுசெய்தபோது.

ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா

தேதி : 2022-05-12

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, எல்லாபுரம் தெற்கு ஒன்றியம் அத்தங்கிகாவனூர் ஊராட்சி ஆதிதிராவிடர் நல்லது துறை சார்பில் தனியார் பேச்சுவார்த்தையின் மூலம் நில அளவை செய்து இலவச வீட்டு மனை பட்டா வழங்கியபோது. உடன் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு. ஆவடி சாமு நாசர் அவர்கள்.

சொந்த செலவில் பேருந்து நிறுத்த நிழற்குடை

தேதி : 2022-05-08

மக்கள் பணியே தலையாய பணி என்று தளபதியார் அளித்த வாக்கை மனத்திலேந்தி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் உள்ள பேருந்து நிலையத்தில் நிழற்குடை இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் எனது சொந்த செலவில் மக்களின் பயன்பாட்டிற்காக புதிய நிழற்குடை அமைத்து தந்தேன்.

கிருஷ்ணா நதி திறப்பு

தேதி : 2022-05-08

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட ஜீரோ பாயிண்ட் இடத்திற்கு கிருஷ்ணா குடிநீர் இரண்டாம் தவணையாக திட்ட வடிவில் தொடர்ந்து மக்கள் தாகம் தீர்க்க 1500 கனஅடி நீர் திறந்து வைத்தபோது.

மாணவ மாணவிகளுடன் சட்டமன்றக்கூட்டத்தொடர்!!

தேதி : 2022-05-06

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் உள்ள உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிகழ்வுகளை காண வந்தபோது

சுகாதா நிலைய தர ஆய்வு

தேதி : 2022-05-05

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, எல்லாபுரம் வடக்கு ஒன்றியம், லட்சிவாக்கம் ஊராட்சி, பெரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தபோது

புதிய மின்மாற்றி திறப்பு

தேதி : 2022-05-01

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம், மேல்முதலம்பேடு ஊராட்சி புதிய மின்மாற்றியை துவக்கி வைத்தபோது

தண்ணீர் பந்தல் திறப்பு

தேதி : 2022-05-01

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கிழக்கு ஒன்றியம் புதுவயல் ஊராட்சியில் பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு

29.10.2021 - இலவச கண்சிகிச்சை முகாம்

தேதி : 2021-10-21

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி ஏலியம்பேடு ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி மக்களின் சுகாதார கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.